வாழ்வியல், மொழி ,பொருளாதாரம், பண்பாடு, உணவு இவை அனைத்திலும் வேறுபாடு இருப்பினும் காதல் சாத்தியமா?
சமயத்தில் பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம்.
ஒரு கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றியிருக்கிறது இந்தத் திரைப்படம்.
மொத்தத்தில் கவிதைபோல் செல்கிறது இந்தத் திரைப்படம்.
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் அடிநாதம்.
அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகனும் கதாநாயகியும் ஆங்கிலத்தில் உரையாடும் போது அந்த mother tongue influence கொண்ட slang அருமை.
குணால் பாசு எழுதிய ஜாப்பனீஸ் வைஃப் புத்தகத்தைத் திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள்.
குழந்தைகளுடன் பார்க்கலாமா என்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதாநாயகன் சுயயின்பம் கொள்வது போல ஒரு மறைமுக காட்சி வரும். அப்போது ஒரு வித நெருடல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Amazon primeல பார்த்தேன்.
Is love possible despite the differences in biology,
language, economy, culture, and food?
At times the protagonist may seem senseless but this film
has turned a question mark into an exclamation mark.
To define in a word, this film as a whole goes like Poem.
The conversion that takes place between the leads forms the
crux of the film.
All the characters are wonderfully designed. The English conversion
with a strong mother tongue influence adds authenticity.
The film is based on the book Japanese Wife by Kunal Basu.
There will be an indirect scene where the protagonist
masturbates in a certain place and be cautious if you can watch with the kids.
Saw it on Amazon prime.
Overall a satisfying watch
No comments:
Post a Comment