"எளிமையான ஒன்று சிறப்பாகவே அமையும்"னு ஒரு முறை என் அபிமான நடிகர் மம்மூட்டி சொன்னார்.
"எப்படி? எப்படி?" என்று மீண்டும் கேட்ட போது.
"இவ்வளவு தான் இருக்கிறது,
ஆன சிறப்பாக வர வேண்டும்.. என்பதற்காக இரண்டு மடங்கு கூடுதல் உழைப்பைக் கொட்டி, நேர்த்தியாகச் செய்தால் சிறப்பாக அமையத்தானே செய்யும்" என்றார்.
ஆமாம் பின்ன, ஆட்டுக்கறி,கோழிக்கறி, மீன்,வடை, பாயசம் னு தடபுடலாக விருந்து வைத்து சுவையில் ஒன்று சரியாக இல்லாத போது பெரிசா தெரியாது.
ரசம் மட்டும் தான் செய்யனுமுனு சொன்னா ....
மெனக்கெட்டனும்.
Shortcutடே கிடையாது.
அதுதான் To let திரைப்படம்.
செழியன் கல்லூரி,பரதேசி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் "நான் larger than life படத்தை எடுக்கவில்லை,slice of lifeஅ தான் எடுத்திருக்கிறேன்"னு சொல்லி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்.
எளிமையான மனிதர்கள்,
அரிதாரம் பூசாத அரிய முகங்கள்,
துன்பத்திலும் நேர்மையாகவும்,மனிதாபிமானமாக நடந்துக் கொள்ளும் கதாநாயகன்,
தமிழில் ஒரு உலக திரைப்படம்..
வேறு என்ன வேண்டும்.
வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ண சொல்றாங்க, இவர்களுக்கு வேறு வீடு கிடைச்சுதா ?அது தான் கதை.
திரைப்படம் அல்ல அது. வாழ்வியல்.
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இளங்கோ-அமுதாவின் குடும்பத்திற்கு என் one bed room apartmentயை முன் பணம் வாங்காமல் வாடகைக்குத் தருவேன்.
குழந்தைகளுடன் பார்க்கலாம். அமேசான் பிரைம் மற்றும் டென்ட் கொட்டாயில் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்.
My favorite actor Mammootty once said, "The simpler the
better." That’s true to a greater extent. To make a simple and realistic artwork
one has to double the effort that is required for regular glossy work.
Consider if you are invited for a grand dinner, of course,
you would be served with different varieties and if one item doesn’t taste well,
it won't disappoint much.
In contrast, if you are asked to prepare a simple basic food for dinner, you
have to make sure the taste and hospitality are good.
There is no Shortcut.
To let movie falls in the second category.
The story revolves around the protagonist Ilango and his
wife Amutha's need for a rented house.
The protagonist behaves honestly and humanely even during his
shortage.
Available in Amazon Prime and Tentkotta.